மெய்யெழுத்துக்களில் வன்மையான ஓசையுடைய எழுத்துக்கள் வல்லினம் என்றும், மென்மையான ஓசையுடைய எழுத்துக்கள் மெல்லினம் என்றும், இவை இரண்டிற்கும் இடைப்பட்ட ஓசையுடைய எழுத்துக்கள் இடையினம் என்றும் வழங்கப்படும்.
- வல்லினம் : க் ச் ட் த் ப் ற்
- மெல்லினம்: ங் ஞ் ண் ந் ம் ன்
- இடையினம்: ய் ர் ல் வ் ழ் ள்
மெய்யெழுத்துக்கள் ஒவ்வொன்றும் அரை மாத்திரை நேரத்தில் ஒலிக்கப்படும்
கீழேயுள்ள அட்டவணையில் தமிழ் மெய்யெழுத்துக்கள், அனைத்துலக ஒலிப்பெழுத்துக்களுடனும், ஒலிப்பு வகைகளுடனும் தரப்பட்டுள்ளன.
இதழ் | பல் | நுனியண்ணம் | வளைநா | இடையண்ணம் | கடையண்ணம் | |
---|---|---|---|---|---|---|
வெடிப்பு | p (b) | t̪ (d̪) | ʈ (ɖ) | tʃ (dʒ) | k (g) | |
ப | த | ட | ச | க | ||
மூக்கு | m | n̪ | ṉ | ɳ | ɲ | ŋ |
ம | ந | ன | ண | ஞ | ங | |
உருட்டு | ɾ̪ | r | ||||
ர | ற | |||||
மருங்கு | l̪ | ɭ | ||||
ல | ள | |||||
உயிர்ப்போலி | ʋ | ɻ | j | |||
வ | ழ | ய |
No comments:
Post a Comment